
போதைபொருள் வர்த்தகர்கள் இருவர் மட்டுவில் கைது
மட்டக்களப்பு கருவப்பங்கேணி, மற்றும் திருப்பெருந்துறை பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் வீடுகளை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
அத்துடன், போதைப்பொருள் வியாபாரி ஒருவரையும் போதைகொருளை தம்வசம் வைத்திருந்த மற்றொரு நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபரிடம் இருந்து 5 கிராம் 650 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடனும் 24 போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித் இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து மட்டு தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் மற்றும் போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரபாத் பெர்ணான்டோ தலைமையிலான பொலிஸார் சம்பவ தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கருவப்பங்கேணி பகுதியிலுள்ள போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் பிரபல போதை பொருள் வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டனர்.
இதில் கைது செய்யப்பட்ட போதை பொருள் வியாபாரியை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்காக நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் மற்றும் கசிப்புடன் கைது செய்தவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
