
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு!
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), நாளை வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய ரீதியில் பணிப்பறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வழமையான வெளிநோயாளர் மற்றும் சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் என குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சுகாதார அதிகாரிகள் தமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வை வழங்கினால், வேலைநிறுத்தத்தைத் தொடரும் முடிவை மறுபரிசீலனை செய்ய முடியும் எனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்குறிப்பிட்டுள்ளது.
