
28 கிலோ கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது
யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை-இன்பருட்டி பகுதியில், நேற்று புதன்கிழமை, 28 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவத்தினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸார் மற்றும் இராணுவப் புலனாய்வு பிரிவினர் இணைந்து நடாத்திய சோதனை நடவடிக்கையின் போது, இவ்வாறு கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
