பதிவு செய்யப்படாத போலி இலக்கங்களுடன் 6 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டது!
களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் பதிவு செய்யப்படாத போலி இலக்கங்கள் மற்றும் பாகங்கள் மாற்றியமைக்கப்பட்ட ஆறு மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேல்மாகாண குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று களுத்துறை பொத்துபிட்டிய, வஸ்கடுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த ஆறு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டதாக களுத்துறை குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த மோட்டார் சைக்கிள்கள் களுத்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ந்தும் சுற்றிவருவதாகவும், இந்த மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி நாடளாவிய ரீதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் இதுவரை நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த மோட்டார் சைக்கிள்கள் வேறு ஏதேனும் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறன.
