‘மருதங்களின் சமர்’ மென்பந்து கிரிக்கெட் துடுப்பாட்ட போட்டிக்கான கிண்ண அறிமுக நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தின் வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தில் கல்வியை வழங்குகின்ற பூநகரி மத்திய கல்லூரி மற்றும் முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி அணிகள் மோதுகின்ற இரண்டாவது ‘மருதங்களின் சமர்’ மென்பந்து துடுப்பாட்ட போட்டி எதிர்வரும் 17ம் திகதி பூநகரி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த வருடம் இரு கல்லூரியின் பெண்களுக்கான மருதங்களின் சமர் துடுப்பாட்ட தொடரும் ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.

இரண்டு போட்டிகளுக்குமான வெற்றிக்கிண்ண அறிமுக நிகழ்வு பூநகரி மத்திய கல்லூரியில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

பூநகரி மத்திய கல்லூரி அதிபர் இராமலிங்கம் பாலச்சந்திரன், முருகானந்தா கல்லூரி அதிபர் அரசரட்ணம் பங்கையற்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு கிண்ணத்தை அறிமுகம் செய்து வைத்தனர்.