ஜனாதிபதி இன்று முல்லைத்தீவுக்கு விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று(02) முல்லைத்தீவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்கிறார் .

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்துக்கான புனரமைப்பு பணிகளை ஜனாதிபதி இதன்போது ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இதேநேரம் வடக்கு தென்னை முக்கோண வலயத்தினை ஆரம்பித்து வைப்பதற்கான நடவடிக்கைகளும் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன.

மாவட்ட அபிவிருத்தி பணிகள் தொடர்பிலும் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார் .