12 மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலைக்கான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

செப்டம்பர் 02 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 12 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாவட்டங்களில் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பக் குறியீடு, ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று திணைக்களம் கூறுகிறது.