வாட்ஸ்அப் மோசடி – உங்கள் கணக்குகளை மீட்டெடுக்க இலகு வழி
இலங்கையில் வாட்ஸ்அப் மோசடிகள் பரவி வருகின்றன.
மோசடி செய்பவர்கள் தொழில்முறை அல்லது அதிகாரப்பூர்வ தொடர்புகளாகக் காட்டி, பயனர்களை ஏமாற்றி, ஒன்-டைம் கடவுச்சொற்களை (ழுவுPகள்) பகிரவோ அல்லது தீங்கிழைக்கும் இணைப்புகளைக் கிளிக் செய்யவோ செய்கிறார்கள்.
ஒரு கணக்கு திருடப்பட்டவுடன், பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பணத்திற்காக குறிவைக்க இது பயன்படுத்தப்படுகிறது.
பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், ழுவுPகள் அல்லது வங்கித் தகவல்களை ஒருபோதும் பகிர வேண்டாம் என்றும், இதுபோன்ற மோசடிகளால் பாதிக்கப்படக்கூடிய வயதான அல்லது தொழில்நுட்ப அறிவு குறைவாக உள்ள உறவினர்களுக்கு கல்வி கற்பிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தங்கள் கணக்குகளுக்கான அணுகலை இழந்தவர்கள் அவற்றை மீட்டெடுக்க [support@whatsapp.com] தொடர்பு கொள்ளலாம்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பான புகார்களை காவல்துறை சைபர் குற்றப் பிரிவிலும் [https://telligp.police.lk] பதிவு செய்யலாம்.