பொலிஸ்மா அதிபர் அறிமுகப்படுத்திய வட்ஸ்அப் எண்ணுக்கு 2000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்
குற்றங்கள் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் நேரடியாக பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடளிப்பதற்கு, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிமுகப்படுத்திய புதிய வட்ஸ்அப் எண்ணுக்கு இதுவரை 2000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த முறைப்பாடுகள் குறித்து ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறுஞ்செய்திகள், காணொளிகள் மற்றும் புகைப்படங்களை நேரடியாக பொலிஸ்மாஅதிபருக்கு அனுப்ப 071 859 88 88 என்ற வட்ஸ்அப் எண் கடந்த 13 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.