26 வயது இளம் குடும்பஸ்தர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
26 வயதுடைய இளம் தந்தையொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உயிரிழந்தவர் மதவாச்சி பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சுஜித் தில்ஷான் (வயது 26) என்பவராவார்.
குறித்த நபர் கடந்த முதலாம் திகதி இரவு 07.00 மணியளவில் வீட்டில் இருந்து வந்து, மன்னார் வீதி, யகாவெவ புகையிரத கடவையில் இருந்து சுமார் 200 மீற்றர் தூரம் சென்று ரயில் வரும் வரை காத்திருந்துள்ளார்.
தலைமன்னாரில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயில் எதிரே ஓடி சென்று தண்டவாளத்தில் தலையை வைத்துள்ளார்.
எதிர்பாராத திடீர் சம்பவத்தால் சாரதியினால் ரயிலை நிறுத்த முடியாமல் போயுள்ளதாக சாரதி தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
