பெண் யூடியூபருக்கு எதிராக 2,500 பக்க குற்றப்பத்திரிகை

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் இருப்பதாகவும், அவருக்கு எதிரான 2,500 பக்க குற்றப்பத்திரிகையில் சிறப்பு விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

டிராவல் ‘வித் ஜோ’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவர் பிரபல சுற்றுலாத் தளங்களுக்குச் சென்று அந்த இடம் குறித்த தகவல்களை தனது யூடியூப் வீடியோ மூலம் வெளியிட்டு பிரபலமடைந்தார்.

இந்தநிலையில் இவர் மீது பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த மே 16ஆம் திகதி ஹரியானா பொலிசார் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஜோதி மல்ஹோத்ராவை அதிரடியாக கைது செய்தனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக, அவரது செல்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு உபகரணங்கள் டிஜிட்டல் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் அவருக்கு எதிரான ஏராளமான ஆதாரங்கள் சிக்கின.

இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்த எஹ்சான்-உர்-ரஹீம் டேனிஷ் அலியுடன் ஜோதி பல முறை பேசியுள்ளமை இதன் மூலம் கண்டறியப்பட்டது. அதன்பின் ரஹீம் 24 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இதுஒருபுறமிருக்க பாகிஸ்தானில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் மார்க்கெட் பகுதிகளில், ஜோதி மல்ஹோத்ரா வலம் வந்த வீடியோ காட்சிகளும் ஆதாரங்ளாக சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெண் யூடியூபருக்கு எதிராக 2,500 பக்க குற்றப்பத்திரிகை
பெண் யூடியூபருக்கு எதிராக 2,500 பக்க குற்றப்பத்திரிகை