25 இந்திய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் அறிவிப்பு

பாகிஸ்தான் வான்பரப்புக்குள் பிரவேசித்த 25 இந்திய ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

கராச்சி மற்றும் லாகூர் உள்ளிட்ட இலக்குகளை நோக்கி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இஸ்ரேலிய ஹரோப் ட்ரோன்கள் இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்டதாக இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

பாகிஸ்தான் வான் பரப்புக்குள் இந்திய ட்ரோன்கள் தொடர்ந்து அனுப்பப்படுகின்றன. இத்தகைய ஆக்கிரமிப்புக்கு கடும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

ட்ரோன் தாக்குதல் சம்பவங்களில் ஒரு சிவிலியன் கொல்லப்பட்டுள்ளதோடு 4 படையினர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை நேற்று முன்தினம் புதன் கிழமை இரவும் நேற்று வியாழக்கிழமை அதிகாலையும் இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களின் பல இராணுவ இலக்குகளை தாக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்ததாக இந்திய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தானின் பல இடங்களிலுள்ள விமான எதிர்ப்பு கட்டமைப்புக்கள் இலக்கு வைக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரம் பாகிஸ்தான் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 16 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்