25 வயது மருமகனின் தாக்குதலில் உயிரிழந்த 59 வயது மாமனார்!

-கிளிநொச்சி நிருபர்-

கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்குள்ளான மாமனார் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த நபரின் மகளுக்கும் அவரது கணவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதையடுத்து மகள் தனது தந்தையின் வீட்டுக்கு வந்துள்ளார்.

அவரை தொடர்ந்து அங்கு வந்த மருமகன் மகளை தாக்க முற்பட்ட போது குறித்த நபர் அதை தடுக்க முயன்றுள்ளார்.

அவ்வேளை அவர் மருமகனின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் கதிரவேலு சிவராசசிங்கம் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார்.

25 வயதுடைய மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபருடன் சேர்த்து தாக்குதலுக்கு உதவிய குற்றச்சாட்டில் அவரது சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக அக்கராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.