முன்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

பேராதனை கொப்பேகடுவ பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 25 வயதுடைய முன்பள்ளி ஆசிரியர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

கூரிய பொருளால் தாக்கப்பட்ட குறித்த பெண்,  இலுக்தென்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் முருதலாவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் எனவும், அவர் பாலர் பாடசாலையில் ஆசிரியை எனவும், பணிக்கு சென்ற வேளையில் தாக்கப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தாக்குதல் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.