24 கோரிக்கைகளில் தீர்வு இல்லாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்தத் திட்டம் – மின்சாரசபை தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

மின்சாரசபை மறுசீரமைப்பு தொடர்பில் 24 கோரிக்கைகளை அடிப்படையாகக்கொண்டு மின்சாரசபை தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்து இதுவரை அரச தரப்பிப்பில் இருந்து எந்தவித தீர்வும் கடைக்கவில்லை. அரசாங்கத்திடமிருந்து முறையான தீர்வு கிடைக்காவிட்டால் திங்கட்கிழமை முதல் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த திட்டமிடுள்ளதாக விடுத்திருக்கிறது.

இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கங்கள் நேற்று வியாழக்கிழமை கொழும்பில் நட்திய செய்தியாளர் சந்திப்பின்போதே இவ்வாறு அரசாங்கத்துக்கு எச்சிரி்ககை விடுத்திருந்தன.

இதன்போது இங்கு கருத்து தெரிவித்த மின்சாரபை பொறியியலாளர் சங்கங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் சதருவன் மங்ஷநாயக்க தெரிவிக்கையில், தற்போது நாங்கள் இலங்கை மின்சாரசபையாக இருந்த எமது நிறுவனம் பல நிறுவனங்களுக்கு மறுசீரமைக்கப்பட இருக்கின்றன.

தற்போது எங்களுக்கு கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றிருக்கிறது. அது ஆங்கில மொழியிலேயே இருக்கிறது. அதில் எமது பெயர், எண் தெரிவிக்கப்பட்டு, நீங்கள் இந்த நிறுவனத்துக்கு இணைக்கப்படுகிறீர்கள் என மாத்திரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

யாராவது ஒருநபர் நிறுவனம் ஒன்றுக்கு இணைக்கப்படும்போது, தனது அடிப்படைச்சம்பளம், தனது பதவிநிலை, தொழில் தன்மை, பதவி உயர்வுகள் போன்ற விடயங்களை தெரிந்திருப்பது கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அதுதொடர்பான எந்த ஆவணமும் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை. எமக்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் கடிதம் நீத்துப்போகின்ற வகையிலான ஒன்றாகும்.

மின்சாரசபையின் மாதாந்த வருமானம் சுமார் 40, 50 மில்லியன் ரூபாவரை இருக்கிறது. இவ்வாறான நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்யும்போது, அந்த நிறுவனத்தின் அமைப்பு தொடர்பில் தீவிரமாக கலந்துரையாடி இருக்க வேண்டும். இவ்வாறான நிறுவனங்களை அவசரமாக மறுசிரமைப்பு செய்யக்கூடாது என்றே நாங்கள் தெரிவித்து வந்தோம்.

என்றாலும் அவ்வாறு மறுசீரமைப்பு செய்வதாக இருந்தால் அதுதொடர்பில் நன்கு அறிந்தவர்களுடன் கலந்துரையாடி சரியான முறையில் செய்ய வேண்டும் என்றே நாங்கள் தெரிவிக்கிறோம். ஆனால் அவ்வாறு எந்த கலந்த்ரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை.

அத்துடன் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்து, 24 கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த மாதம் 4ஆம் திகதி முதல் மின்சாரசபை ஊழியர்கள் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எமது தொழிற்சங்ன போராட்டம் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தாது, செயற்பட்டு வந்தால். எதிர்வரும் திங்கட்கிழமை முதல், எமது தொழிற்சங்க போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், வலுசக்தி தலைவர், உயர் அதிகாரிகளுடன் எந்தவித கலந்துரையாடலுக்கும் செல்லாமல் இருப்பதற்கு தீர்மானிப்போம்.