
மட்டு.காத்தான்குடியில் கடையும் வீடும் முற்றாக எரிந்து நாசம்!
-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு காத்தான்குடியில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு, கடையும் வீடும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
இதன்போது எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை
பொலிஸாரும், தீயணைக்கும் படையினரும் இணைந்து, தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்
இது தொடர்பாக மேலதிக விசாரணையினை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .


