23 ஆண்டுகளின் பின்னர் ரயிலில் காய்கறிகள் கொண்டு செல்லப்பட உள்ளது
ஜனவரி மாதம் முதல் காய்கறிகளை கொண்டு செல்வதற்காக பிரத்யேக புகையிரத சேவைகளை அறிமுகப்படுத்த இலங்கை ரயில்வே முடிவு செய்துள்ளது.
மலையகப் பகுதிகளில் இருந்து கொழும்பு கோட்டைக்கு ரயிலில் மரக்கறிகளை கொண்டு செல்வது 23 வருடங்களின் பின்னர் பரீட்சார்த்தமாக நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த பிரேரணையின் பிரகாரம் ரயிலில் மரக்கறிகளை கொண்டு செல்வதற்கு ஐந்து விசேட பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இந்த புகையிரதம் கொழும்பில் உள்ள பல்பொருள் அங்காடிகள் மற்றும் மானிங் சந்தைக்கு காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு செல்லும்.