ஈரானிய கப்பலில் மீட்கப்பட்ட 22 பேர் வெலிசர கடற்படை தளத்திற்கு இடமாற்றம்!

ஈரானியப் போர்க்கப்பல் ஐரிஸ் டேனாவில் இருந்து மீட்கப்பட்ட 32 பேரில், 22 பேர் காலி போதனா வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை முடிந்து நேற்று சனிக்கிழமை வெளியேறியுள்ளனர்.

இதேவேளை வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய குறித்த 22 பேரும் நேற்று இரவு வெலிசர கடற்படை தளத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த இடமாற்ற நடவடிக்கையானது பொலிஸார் மற்றும் கடற்படையினரின் விசேட பாதுகாப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.