22 ஆவது திருத்தத்திற்கு எதிராக 9 மனுக்கள்

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு எதிரானவை என தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றில் 09 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு, கலாநிதி குணதாச அமரசேகர உள்ளிட்ட 9 தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தமானது அரசியலமைப்பின் மூலம் உறுதியளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, அதற்கான சரத்துகளை ஏற்க வேண்டும் என்றால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் மற்றும் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெற வேண்டும் என்ற முடிவை வழங்க வேண்டும் என்றும் அது தொடர்பான மனுக்களில் கோரப்பட்டுள்ளது.