காலநிலை பாதிப்பு: தமிழில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்
நிலவும் அசாதாரண காலநிலையின் பாதிப்புகள் குறித்து தமிழ் மொழி மூலம் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்படுபவர்கள் அவசர ஒத்துழைப்புகளைக் கோர 107 என்ற விசேட அவசர அழைப்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தமிழ்மொழி மூலம் அறிவிக்க முடியும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.