இலங்கை அகதிகள் முகாமில் இருவர் மீது தாக்குதல்

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருவர் தாக்கப்பட்ட காட்சி காணொளியாக வெளியாகியுள்ளன.

கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் பகுதியில் இலங்கை அகதி முகாமிலிருந்த இரு நபர்களை முன் விரோதம் காரணமாக சரமாரியாக தாக்கிய சம்பவம் தற்போது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல் நடத்திய நபர் கற்கள் மற்றும் கத்தியைக் கொண்டு கொடூரமாக தாக்கியுள்ளதுடன் தடுக்க வந்த நபர்களை தாக்கச் செல்லும் காட்சி அப்பாதையில் உள்ள சிசிரிவி காட்சியில் பதிவாகியுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்