பதவியேற்ற சில நாட்களில் படுகொலை செய்யப்பட்ட மேயர்!

தெற்கு மெக்சிகோவின் சில்பான்சிங்கோ நகர மேயர் அலெஜான்ட்ரோ ஆர்கோஸ் (Alejandro Arcos) கொலை செய்யப்பட்டுள்ளதாகத் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பதவியேற்று ஒரு வாரத்திற்குள் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்

வன்முறையால் பாதிக்கப்பட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளில் தொடர்ச்சியாக அரசியல்வாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

மெக்சிகோவில் கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற மேயர் தேர்தல்களுக்கு முன்னதாக, சுமார் ஆறு வேட்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.