21 வயது இளைஞரின் நெஞ்சை உலுக்கும் பதிவு
புது டெல்லியில் கடந்த 2023 ஆண்டு 19 வயதுள்ள ஒரு இளைஞருக்கு குடலில் புற்றுநோய் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் அவருக்கு கண்டுபிடிக்கும்போதே Advanced Stage என்று சொல்லப்படுகிற, முற்றிய 4 -ஆவது நிலைக்கு சென்றுவிட்டது.
கீமோ தெரப்பி உள்பட பலவிதமான சிகிச்சை முறைகளை மேற்கொண்டும் நோய் முற்றிவிட்டதால், அவர் ஓராண்டு உயிர்வாழ்வதே சிரமம் என மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர்.
இந்நிலையில் Twentiesindia Subreddit என்ற சமூக வலைதளப் பக்கத்தில், தன்னுடைய வலி, எதிர்கால வாழ்க்கை குறித்த கனவுகள், வேதனை,பயம் என நெஞ்சை உலுக்கும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இன்னும் சில நாட்களில் தீபாவளி, தெருக்கள் எல்லாம் வண்ண விளக்குகளால் ஜொலிக்க ஆரம்பித்துவிட்டன. ஆனால், நான் இவற்றை எல்லாம் காண்பது இதுதான் கடைசி முறை என்பதை நினைத்தாலே வேதனையாக இருக்கிறது.
இந்த பண்டிகை கால் விளக்குகள், மகிழ்ச்சி, சிரிப்பு எல்லாவற்றையும் இழக்க போகிறேன். நான் சத்தமில்லாமல் சிறிது சிறிதாக சரிந்துகொண்டிருக்கின்றேன். ஆனாலும் வாழ்க்கை தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
அடுத்த ஆண்டு என்னுடைய கல்லறையின் மீது வேறு யாரோ விளக்கு ஏற்றுவார். நான் வெறும் நினைவாக மட்டுமே இருப்பேன். எனக்கு சுற்றுலா செல்ல மிகவும் பிடிக்கும். தனியாக நிறுவனம் தொடங்கி விரும்பினேன். நாய் வளர்க்க ஆசைப்பட்டேன். ஆனால் எனது நேரம் கரைந்துகொண்டிருப்பது எனது நினைவுக்கு வருகிறது. அதில் மூழ்கி எனது ஆசைகள் மழுங்கிவிடுகின்றன. நான் வீட்டில்தான் உள்ளேன். என் பெற்றோரின் முகத்தில் சோகத்தை பார்த்தேன். இதை நான் எழுதுகிறேன் என்றுகூட தெரியவில்லை. அடுத்து என்ன நடக்குமோ எனக்கு தெரியாது. அதில் மறைந்து போவதற்கு முன்னர் சத்தமாக சொல்லிவிட்டு செல்ல விரும்பினேன்..”
இவாறெல்லாம் எழுதிய பின்னர் கடையாக அந்த இளைஞர் “அதிசயம் நடந்தால்…” என பதிவிட்டிருந்தார்.
இதை பார்த்த பலர், மிகுந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர், இன்னும் சிலர் நிச்சயம் அதிசயம் நடக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த மேஜை உலுக்கும் பதிவு தற்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது.