21 வயது இளைஞன் உயிரிழப்பு
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் மத்தியூஸ் வீதியை சேர்ந்த அன்ரன் தினுஜன் (வயது 21) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் சந்திக்கு அருகில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் வீதியோர கால்வாய்க்குள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்திய சாலையில் 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்
எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group ஐ அழுத்தவும்
