21 தெருநாய்களுக்கு வெறிநாய் கடித்தல் தடுப்பு மருந்து (ARV) செலுத்தப்பட்டது

21 தெருநாய்களுக்கு வெறிநாய் கடித்தல் தடுப்பு மருந்து (ARV) செலுத்தப்பட்டுள்ளது

-அம்பாறை நிருபர்-

பொதுமக்களுக்குச் சிறந்த பாதுகாப்பான சூழலை உறுதி செய்யும் பொருட்டு சம்மாந்துறை சுகாதாரப் பிரிவினர் வெறிநாய் கடி உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

சம்மாந்துறை பிரதேச செயலக வளாகத்திலும், தள வைத்தியசாலை வளாகத்திலும் நான்கு பேரை தெருநாய்கள் கடித்தன.

இது குறித்து தகவல் அறிந்ததும், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் குழுவினர் உடனடியாகச் செயல்பட்டனர்.

கடித்த நாய் 24 மணி நேரத்திற்குள் இறந்த நிலையில் அதன் தலை உடனடியாகத் துண்டிக்கப்பட்டு வெறிநாய் கடித்தலுக்கான (Rabies) பரிசோதனைக்காக மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டது.

அதே வேளையில், பிரதேச செயலகம் மற்றும் வைத்தியசாலை வளாகங்களில் இருந்த 21 தெருநாய்களுக்கும் வெறிநாய் கடித்தல் தடுப்பு மருந்து (ARV) செலுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் சம்மாந்துறையில் நடக்கும் இரண்டாவது வெறிநாய் கடி சம்பவம் இதுவாகும்.

சட்டப்படி தெருநாய்களைக் கொல்ல முடியாத காரணத்தால், அவற்றிற்குத் தடுப்பு மருந்துகளைச் செலுத்துவது மட்டுமே தற்போது தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

21 தெருநாய்களுக்கு வெறிநாய் கடித்தல் தடுப்பு மருந்து (ARV) செலுத்தப்பட்டது
21 தெருநாய்களுக்கு வெறிநாய் கடித்தல் தடுப்பு மருந்து (ARV) செலுத்தப்பட்டது