21வது திருத்தம் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்
அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பாக நாளை திங்கட்கிழமை அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என, நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாத வகையில் திருத்தம் கொண்டு வரப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், தற்போதுள்ள சுயாதீன ஆணையங்களுடன் கூடுதலாக, தேசிய தணிக்கை ஆணையம் மற்றும் கொள்முதல் ஆணையம் ஆகியவை சுயாதீன ஆணையங்களாக திருத்தப்படும்.
தற்போதுள்ள ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை மேலும் பலப்படுத்துவதுடன், அவற்றை சுயாதீனமாகவும் ஆக்குவதற்கு அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் முயல்வதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநரை அரசியலமைப்பு சபையின் கீழ் கொண்டு வருவதற்கும் புதிய திருத்தம் முன்மொழிகிறது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
