2028இல் வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்யும் நடவடிக்கை முற்றாக நிறுத்தப்படும்

2028 ஆம் ஆண்டு, வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யும் நடவடிக்கையை முற்றிலுமாக நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

இதன்படி, இறக்குமதியை இலங்கையிலேயே உற்பத்திகளை அதிகரித்து, தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு போரத்தீவுப்பற்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை விவசாயத்துறையின் வழிகாட்டுதலுடன், நாட்டிற்குத் தேவையானவற்றைப் பயிரிட அனைவரையும் கடுமையாக உழைக்குமாறும் அமைச்சர் கே.டி.லால்காந்த வலியுறுத்தியுள்ளார்.