2026 ஆம் ஆண்டுக்கான பரீட்சை திகதிகள் அறிவிப்பு!

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளரினால் 2026 ஆம் ஆண்டுக்கான பரீட்சை திகதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி டிட்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர (G.C.E A/L) பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஆம் ஆண்டில் ஜனவரி 12 முதல் ஜனவரி 20 வரை நடாத்தப்படும்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (G.C.E O/L) பெப்ரவரி 17 முதல் பிப்ரவரி 26 வரை நடைபெறும்.

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர (G.C.E A/L) பரீட்சை ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறும்.

அத்துடன் 2027 ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர (G.C.E A/L) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்பத் பரீட்சை ஒக்டோபர் 24 ஆம் திகதி நடைபெறும்

இந்த வருடத்தின் இறுதி பரீட்சையாக 2026 ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொது தரா தர சாதாரண தரப் (G.C.E O/L) பரீட்சை டிசம்பர் 8 முதல் டிசம்பர் 17 வரை நடைபெற உள்ளது.