2026 T20 உலகக் கிண்ண போட்டிக்கு தகுதி பெற்ற அணிகள்
இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் 2026 ஆம் ஆண்டுகான ஐசிசி ஆண்கள் இருபதுக்கு 20 உலக கிண்ண போட்டிக்காக தகுதி பெற்ற அணிகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அணிகளின் செயல்திறன், 2024 T20 உலகக் கிண்ண தொடரில் நடத்தப்பட்ட சாதனைகள், ICC தரவரிசை மற்றும் பிராந்தியத் தகுதிச் சுற்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ICC அறிவித்துள்ளது .
தொடரை நடத்தும் நாடுகளான இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளும் ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் 2024 ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டியில் செயல் திறன் அடிப்படையில் தகுதி பெற்றுள்ளன.
மேலும், ஐசிசி T20 தரவரிசை மூலம் அயர்லாந்து, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இதேநேரம் கனடா, இத்தாலி, நெதர்லாந்து, நேபாளம், ஓமன், ஐக்கிய அரபு இராச்சியம், நமீபியா மற்றும் சிம்பாப்வே அணிகளும் தகுதி பெற்றுள்ளன.
2026 ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தின் முதல் சுற்றுக்கு 20 அணிகள் தகுதி பெற்றுள்ளன .