2026 LPL தொடருக்கு விளம்பர தூதர் கிறிஸ் கெய்ல்?

2026 LPL தொடருக்கு விளம்பர தூதர் (Brand Ambassador) ஆகும் கிறிஸ் கெய்ல் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரின் ஆறாவது சீசனுக்கான அதிகாரப்பூர்வ விளம்பர தூதர் (Brand Ambassador) ஆக மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் நியமிக்கப்பட்டுள்ளார்.

LPL 2026க்கான சரியான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. 2025 ஆம் ஆண்டு போட்டி நடத்தப்படாத நிலையில், 2026 ஆம் ஆண்டில் பிரம்மாண்டமான மறுவரவுக்குத் தயாராகும் LPL-க்கு “யூனிவர்ஸ் பாஸ்” என அறியப்படும் கிறிஸ் கெய்லின் பங்களிப்பு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

2020 ஆம் ஆண்டு LPL ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து , இலங்கையின் முதன்மையான T20 போட்டியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது, இதில் சிறந்த சர்வதேச நட்சத்திரங்கள் மற்றும், வளர்ந்து வரும் உள்ளூர் திறமையாளர்களும் கலந்து கொள்கின்றனர்.

கிறிஸ் கெய்லின் ஈடுபாடு லீக்கின் உலகளாவிய பிரபலத்தையும் உற்சாகத்தையும் மேலும் உயர்த்தும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.