
2026 ஏப்ரலுக்குள் பாரிய பொருளாதார நெருக்கடி – ஹரின் பெர்னாண்டோ எச்சரிக்கை!
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளை சரியாக நிர்வகிக்காவிட்டால், 2026 ஏப்ரல் மாதத்திற்குள் இலங்கை ஒரு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பிரதி பொதுச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற திங்கட்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அத்துடன் சூறாவளியால் ஏற்பட்ட பொருளாதார சேதம் கடுமையானது என்றும், நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கத்திடமும் ஜனாதிபதியிடமும் தெளிவான திட்டம் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
