2026 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் ஒக்டோபரில்

‘உற்பத்திப் பொருளாதாரம் மற்றும் அனைவரையும் பொருளாதார அபிவிருத்தியில் பங்கெடுக்கச் செய்தல்’ எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் போது தேசிய கொள்கைச் சட்டகத்தில் உட்சேர்க்கப்பட்டுள்ள முன்னுரிமைகள் மற்றும் கிராமிய அபிவிருத்தித் தொடக்க முயற்சிகளுக்கு முன்னுரிமையளிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை 2025 ஒக்டோபர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும்.

அதன் இரண்டாம் வாசிப்பு (வரவு செலவுத்திட்ட உரையை) 2025 நவம்பர் மாதத்தில் நடாத்துவதற்கும், மூன்றாம் வாசிப்பின் வரவு செலவுத்திட்ட விவாதத்தை 2025 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடாத்துவதற்;கு ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.