2024 பொதுத்தேர்தலில் பொதுஜனபெரமுன இலகுவாக வெற்றி பெறும்!
நான் அரசியலில் இருந்து தற்காலிகமாகவே விலகியுள்ளேன், அரசியல்வாதிகள் ஒருபோதும் ஓய்வுபெறுவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.
இது தற்காலிக நிறுத்தம், அரசியல்வாதிகள் ஒருபோதும் ஓய்வுபெறுவதில்லை.
2024 பொதுத்தேர்தலில் பொதுஜனபெரமுன இலகுவான வெற்றியை பெறும், அனைத்து ராஜபக்சாக்களும் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்கவில்லை, சசீந்திர ராஜபக்ச மொனராகல மாவட்டத்தில் போட்டியிடுகின்றார், என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
