
2024 க்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள்
2024 க்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள்
மூத்த பிரஜைகளுக்கான மாதாந்த கொடுப்பனவான 2000 ரூபா 3000 ரூபாவாக அதிகரிக்கப்படும்.
சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வலுக்கொடுக்கும் வகையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன் 30 பில்லியன் ரூபா கடன் வசதிகளை வழங்குவதற்கு நாம் செயற்பட்டு வருகின்றோம்.
ஊனமுற்ற நபர்கள், Chronic kidney disease மற்றும் மூத்த குடிமக்களை இலக்காகக் கொண்ட நன்மை திட்டங்களுக்காக 205 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
2024 பட்ஜெட் உரையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு.
மலையகப் பகுதிகளில் பொது வசதிகளை மேம்படுத்த பத்து பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
பெருந்தோட்ட வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணி உரிமைகளை வழங்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக 4 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
கடந்த சில ஆண்டுகளாக கிராமப்புற வீதிகள் முறையாக பராமரிக்கப்படாமல், பழுதடைந்த கிராம வீதிகளை சீரமைக்க, பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
இயற்கை அனர்த்தங்களினால் சேதமடைந்த பாலங்கள் மற்றும் வீதிகளின் பராமரிப்புக்காக இரண்டு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
பேராதனை பல்கலைக்கழகத்தை அபிவிருத்தி செய்வதற்கு 500 மில்லியன் ஒதுக்கீடு.
ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வகங்கள் மற்றும் தொடர்புடைய வசதிகளை மேம்படுத்த 40 மில்லியன் ஒதுக்கீடு.
நான்கு புதிய பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்.
*சீதாவகா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
*கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கீழ் குருநாகல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
*நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
*சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகம்
அடுத்த சில ஆண்டுகளில் தற்போதைய பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை மூன்று மடங்காக உயர்த்தி, உள்ளூர் மாணவர்களை மட்டுமல்ல, வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்கும் என்று ஜனாதிபதி நம்புகிறார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் தொடங்க 55 பில்லியன் கூடுதல் ஒதுக்கீடு..
நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களையும் உள்ளடக்கும் வகையில் ‘சுரக்ஷா’ மாணவர் காப்பீட்டுத் திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
2024 பட்ஜெட் உரையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு.
வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டமானது பயிர்களை பல்வகைப்படுத்துவதற்கு பட்ஜெட்டில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
நெல் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும். இதற்காக 2500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
நன்னீர் மீன்பிடித் தொழிலின் அபிவிருத்திக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்
உற்பத்தியை மேலும் அதிகரிக்க பால் பண்ணையாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். தற்போது பால் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நோக்கில் அபிவிருத்தியடைந்துள்ள அம்பேவெல பால் பண்ணையின் அண்மைய வெற்றியை ஜனாதிபதி விக்கிரமசிங்க எடுத்துரைத்தார். தினசரி பால் உற்பத்தியை நாளொன்றுக்கு 20 மில்லியன் லீட்டராக அதிகரிப்பதே எங்களின் நோக்கம்.
பதுளையில் இதயம் மற்றும் நுரையீரல் புத்துயிர் பெறும் பிரிவு வழங்கப்படும். அதற்காக 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
மருந்துகள் கொள்முதல் செய்வதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க தனி நிறுவனம் அமைக்கப்படும்.
2034 க்குள் அனைவருக்கும் ஆங்கிலக் கல்வியறிவு அளிக்கும் 10 ஆண்டுத் திட்டத்திற்கு ரூ. 500 மில்லியன் ஒதுக்கப்படும்
புறக்கோட்டை, காலி, மாத்தறை, அநுராதபுரம், #யாழ்ப்பாணம் போன்ற பெருநகரங்களில் உள்ள புகையிரத நிலையங்களை மையப்படுத்தி, பொது தனியார் பங்களிப்பின் அடிப்படையில் கலப்பு அபிவிருத்தித் திட்டங்களாக Station Plaza or Railway Station Towns நிறுவுவதற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து முன்மொழிவுகள் கோரப்படும்.
மாகாண சபைகளால் ஏற்றுமதி கைத்தொழில்களை ஊக்குவிப்பதற்கான வருடாந்த புரள்வு வரம்பு ரூ. 600 மில்லியன். இந்த நடவடிக்கையானது ஏற்றுமதி சார்ந்த தொழில்களை மேம்படுத்துவதற்கு மாகாண சபைகளுக்கு உதவும்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவட முதல் மீரிகம வரையிலான பகுதிக்கான பணிகள் சீனாவுடன் இணைந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
பொதுமக்கள் செயலகங்களை அமைப்பதற்கு 700 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும். ஜனவரி 1ஆம் திகதி முதல் நகர சபைகளில் சம்பளம் வழங்க 80 சதவீத நிதியுதவி வழங்கப்படும்
வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம், கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதி சீனாவுடன் இணைந்து ஆரம்பிக்கப்படும் . குருநாகலிலிருந்து கலகெதர வரையிலான பகுதியை நிர்மாணிப்பதற்கு ஜப்பானின் ஆதரவைப் பெறுவோம் என்று நாங்கள் நம்புகிறோம்
மாகாண சுற்றுலா சபைகளின் அபிவிருத்திக்காக ரூ. 750 மில்லியன் ஒதுக்கீடு.
சுற்றுலாத் துறை தொடர்பான புதிய சட்டத்தை ஏற்க ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு ரூ. 8 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதில் ஊக்கியாக செயல்படுகிறது மற்றும் பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக நல்வாழ்வை ஆதரிக்கிறது.
அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், திருகோணமலை, பிங்கிரிய மற்றும் கண்டியை மையமாகக் கொண்டு புதிய முதலீட்டு வலயங்கள் நிறுவப்பட வேண்டும்.
இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம்.
இலங்கையின் சுங்கச் சட்டங்களை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இலங்கையின் இரத்தினக்கல் தொழிற்துறையில் முழுத் திறனை அடைய மூன்று மாத சிறப்புத் திட்டம்
இரண்டு அரசுக்கு சொந்தமான வங்கிகளின் இருபது சதவீத பங்குகள் மூலோபாய முதலீட்டாளர்கள் அல்லது பொதுமக்களுக்கு வழங்கப்படும்.
2032 ஆம் ஆண்டளவில் இலங்கையின் பொதுக் கடன் 95 வீதமாகக் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
காணாமல் போனவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்குவதற்கு மேலும் ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்
பூநகரி நகர அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
#யாழ்ப்பாணத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கான அடிப்படை பணிகளுக்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளக முரண்பாடுகள் முடிவுக்கு வந்தாலும் மீள்குடியேற்றப்படாத இடங்கள் இன்னும் உள்ளன. மீள்குடியேற்றத்திற்கு Rs. 2,000 மில்லியன் ஒதுக்கீடு
மாகாண மற்றும் பாடசாலை கிரிக்கெட்டுக்கான வசதிகளை மேம்படுத்த 1.5 பில்லியன் ஒதுக்கீடு.
2024 பட்ஜெட் உரையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு.
வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டமானது பயிர்களை பல்வகைப்படுத்துவதற்கு பட்ஜெட்டில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நெல் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும். இதற்காக 2500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
நன்னீர் மீன்பிடித் தொழிலின் அபிவிருத்திக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்
உற்பத்தியை மேலும் அதிகரிக்க பால் பண்ணையாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். தற்போது பால் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நோக்கில் அபிவிருத்தியடைந்துள்ள அம்பேவெல பால் பண்ணையின் அண்மைய வெற்றியை ஜனாதிபதி விக்கிரமசிங்க எடுத்துரைத்தார். தினசரி பால் உற்பத்தியை நாளொன்றுக்கு 20 மில்லியன் லீட்டராக அதிகரிப்பதே எங்களின் நோக்கம்.
பதுளையில் இதயம் மற்றும் நுரையீரல் புத்துயிர் பெறும் பிரிவு வழங்கப்படும். அதற்காக 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
மருந்துகள் கொள்முதல் செய்வதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க தனி நிறுவனம் அமைக்கப்படும்.
2034 க்குள் அனைவருக்கும் ஆங்கிலக் கல்வியறிவு அளிக்கும் 10 ஆண்டுத் திட்டத்திற்கு ரூ. 500 மில்லியன் ஒதுக்கப்படும்
2024 பட்ஜெட் உரையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு.
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை நுகர்வோருக்கு தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கும் 250 மில்லியன் ஒதுக்கீடு.
சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு அருகில் 600 ஏக்கர் காணி ஒதுக்கீடு.
