2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் : UPDATE 1

2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கிறார்.

அதன்படி அவர் முன்வைத்துள்ள விடயங்களில் ஒரு பகுதி பின்வருமாறு

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ஆரம்பகட்டமாக 4 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான மாதக் கொடுப்பனவுகளுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

சிரேஷ்ட பிரஜைகளுக்கான மாதக் கொடுப்பனவு 3,000 ரூபாவால் அதிகரிப்பு

விசேட தேவையுடையவர்கள், நீரிழிவு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாத கொடுப்பனவு 2,500 ரூபாவால் அதிகரிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்காக 283 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

அரச சேவையாளர்களுக்கான கொடுப்பனவு 10,000 ரூபாவால் அதிகரிப்பு

பொருளாதார பாதிப்பினால் 30 சதவீதமாக உயர்வடைந்த வட்டி வீதம் தற்போது 15 சதவீதமாக குறைவடைந்துள்ளது

நுவரெலியா மாவட்டத்தில் எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்தை உருவாக்குவோம்

புதிய மத்திய வங்கி சட்டத்துக்கு அமைய எண்ணம் போல் நாணயம் அச்சிட முடியாது. ஆகவே எதிர்வரும் ஆண்டு அரச வருமானத்தை 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரித்துக் கொள்ள வேண்டும்