2021 ஆம் ஆண்டுக்கு பின்னர் குடிமகன்களை விட குடிமகள்கள் அதிகரிப்பு

உலக அளவில் மது அருந்துவோரில் ஆண்களைவிடப் பெண்கள் அதிக அளவில் இருப்பதாக நியூயார்க்கை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவிலேயே அதிக அளவிலான பெண்கள் குடி பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக பிஞ் ரிங்கிங் என்று சொல்லப்படுகின்ற குறிப்பிட்ட குறைவான நேரத்தில் அதிகபடியான மதுவை எடுத்துகொள்வதில் பெண்கள் முதலிடம் வகிப்பதாக இந்தியாவில் தேசிய குடும்பநலன் ஆய்வகம் மேற்கொண்ட தரவில் கண்டறியப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கு பின்னர் பெண்கள் மற்றும் மற்றும் கல்லூரி மணவிகளிடையே  மது அருந்தும் அளவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெண்களுக்கு பிஞ் ரிங்கிங் பழக்கம் இருப்பதால் உடல் நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்