2000 ரூபாவிற்கு விற்பனையாகும் இளநீர்

ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகளில் தற்போது நமது நாட்டின் செவ்விளநீர் ஒன்று 1,500 முதல் 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்காலத்தில் நம் நாட்டின் முக்கிய ஏற்றுமதி பயிராக செவ்விளநீர் மாறும் என்பது உறுதி என அவர் மேலும் சுட்டிகாட்டினார்.

ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு, முருதவெல ருவாவ கிராமத்திற்கு அருகாமையில் இரண்டாவது செவ்விளநீர் பயிர்ச்செய்கை கிராமம் நிறுவப்பட்டுள்ள நிலையில் அங்கு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.