200 ரூபாயை வெங்காயத்துக்கு நிர்ணயிக்க வேண்டும் -விவசாயிகள்
இந்தியாவில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதால் உள்ளூர் வெங்காயத்தை விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு கிலோகிராம் வெங்காயத்துக்கான விலையை அரசாங்கம் 200 ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் என வெங்காய உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று சமர்ப்பிக்கப்படும் வரவு -செலவுத் திட்டத்தில் வெங்காயத்தின் விலை தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த முன்னர் தெரிவித்திருந்தார்
