
20ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடவிருந்த யுவதிக்கு நேர்ந்த சோகம்: குடும்பத்தினர் படுகாயம்
கலேவெல நகரில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் யுவதி உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறிபுர பகுதியைச் சேர்ந்த எஸ். எச். லோச்சனா காவ்யாஞ்சலி (வயது – 19) என்ற இளம்பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இன்று வெள்ளிக்கிழமை இவரது 20வது பிறந்தநாள் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
தெஹியத்தகண்டிய சிறிபுர பிரதேசத்தில் இருந்து குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக முச்சக்கர வண்டி தாய், தந்தை மற்றும் 2 மகளும் சென்று கொண்டிருந்த போது, கலேவெல நகரின் பிரதான வீதிக்கு அருகில் கெப் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் பின்னால் வந்த தார் ஏற்றிச் சென்ற வாகனம் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் பின்னர் முச்சக்கரவண்டிக்குள் இருந்த யுவதி தூக்கி வீசப்பட்டு தார் ஏற்றிச் சென்ற வானத்தின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த தாய், தந்தை மற்றும் ஏனைய மகள் ஆகியோர் சிகிச்சைக்காக தம்புள்ளை மற்றும் கலேவெல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கெப் வண்டியின் சாரதி மற்றும் தார் ஏற்றிச் சென்ற வாகனத்தின் சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
