2 ஆவது திருமணம் செய்ய தடை: பெற்ற மகளை கோடரியால் கொத்தி கொன்ற தந்தை!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் குழந்தை இருப்பதால் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என பெற்ற மகளை தந்தை கோடரியால் கொத்தி கொண்டுள்ளார்.

 

ஆலப்புழாவிலுள்ள மாவேலிக்கரை என்ற பகுதியை அடுத்துள்ளது புன்ன மூடு என்ற கிராமத்தில் ஸ்ரீமகேஷ் வித்யா தம்பதி வசித்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான இவர்களுக்கு 6 வயதில் நட்சத்திரா என்ற மகள் உள்ளார். இந்த சூழலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு குடும்ப தகராறு காரணமாக மனைவி வித்யா தற்கொலை செய்துகொண்டார்.

மனைவியின் தற்கொலைக்கு பிறகு தனது தாய், தந்தை, மகள் என வாழ்ந்து மகேஷ் வாழ்ந்து வந்துள்ளார். அவரது தந்தையும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ரயிலில் மோதி இறந்துள்ளார். இதனால் 62 வயது தாய் மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்த இவர்இ மீண்டும் 2 ஆவது திருமணம் செய்ய எண்ணியுள்ளார்.

அதன்படி பெண் பார்க்க பலமுறை சென்றுள்ளார். எனினும் இவருக்கு பெண் குழந்தை இருப்பது ஒரு தடையாகவே இருந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து இவர் பெண் பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் தாய் பக்கத்துக்கு வீட்டில் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், திடீரென சிறுமி நட்சத்திராவின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.இதனை கேட்டு பதறி வந்த அவர் பார்க்கையில் மகேஷ், தனது கையில் கோடாரியை வைத்து நின்றுள்ளார். சிறுமி இரத்த வெள்ளத்தில் கீழே கிடந்துள்ளார்.

இதை கண்டு அதிர்ந்த பாட்டி, தனது பேத்தியை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கே சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்ந்து பொலிஸாரினால் தந்தை மகேஷ் கைது செய்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.

பொலிஸ் விசாரணைகளின் போது மகள் இருப்பதால் தனக்கு இரண்டாவது திருமணம் ஆகவில்லை என்ற ஆத்திரத்தில் தனது மகளை தானே கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவரை சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்