இலங்கை கடற்பரப்பில் வைத்து 2 பில்லியன் போதைப் பொருளுடன் ஆறுவர் கைது

இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடலில் வைத்து புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட ஒருங்கிணைந்த புலனாய்வு நடவடிக்கையில் 110 கிலோகிராம் ஹெரோயின் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து 415 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் கடந்த 12 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது ஆறு பேர் கைது செய்யப்பட்டதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்திய கப்பல் மற்றும் சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை மேலதிக நடவடிக்கைக்காக கொழும்புக்கு கொண்டு வரப்பட்டனர்.

அரச புலனாய்வுப் பிரிவினரும் இலங்கைக் கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட புலனாய்வு நடவடிக்கையில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், சுமார் 111 கிலோ மற்றும் 606 கிராம் ஹெராயின் மற்றும் சுமார் 10 கிலோ மற்றும் 254 கிராம் ஹாஷிஸ் ஆகியவற்றை ஏற்றிச் சென்ற உள்ளூர் பலநாள் மீன்பிடி இழுவை படகு பிடிபட்டது.

இலங்கையின் தெற்கில் இருந்து சுமார் 413 கடல் மைல் (சுமார் 764 கிமீ) தொலைவில் மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கையின் போது , இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 06 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று காலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை நேரில் பார்வையிட்டார்.

கடற்படை புலனாய்வு மற்றும் அரச புலனாய்வு சேவையின் தலைமையிலான இந்த நடவடிக்கையின் போது, உள்ளூர் மீன்பிடி இழுவை படகை சந்தேகத்தின் பேரில் இடைமறித்து சோதனை செய்த போது கப்பலில் இருந்த சட்டவிரோத போதை பொருட்களைக் கண்டுபிடித்தது.

ஐந்து சாக்குகளில் அடைக்கப்பட்ட 99 பொட்டலங்களில் சுமார் 111 கிலோ மற்றும் 606 கிராம் ஹெராயின் மற்றும் 09 பொதிகளில் சுமார் 10 கிலோ மற்றும் 254 கிராம் ஹாஷிஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கப்பலில் இருந்த 06 இலங்கை பிரஜைகளையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 2800 மில்லியன் ரூபா என நம்பப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு, இரணைவில, ஆண்டிகம மற்றும் மினுவாங்கொட பிரதேசங்களைச் சேர்ந்த 29 முதல் 58 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.