
2 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
யாழ்ப்பாண நகரப்பகுதியை அண்மித்த பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
யாழ்ப்பாணம் – அராலி வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்று வியாழக்கிழமை மதியம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
குறித்த விபத்தில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த யாழ். போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தரான மகேஸ்வரன் மயூரன் (வயது 37) மற்றும் அவருடன் பயணித்த வாகனங்களை பழுது பார்க்கும் பணியாளரான அராலி மத்தியை சேர்ந்த ஜெயசுந்தரம் சரோஜன் (வயது 29) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
