2 மில்லியன் ரூபா பெறுமதியான குழந்தை சுகாதாரப் பொருட்கள் நன்கொடை

 

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகளின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக Sisili Projects Consortium Pvt Ltd நிறுவனம் 02 மில்லியன் ரூபா பெறுமதியான குழந்தை சுகாதாரப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்த நன்கொடையை Sisili Projects Consortium Pvt Ltd நிறுவனத்தின் பணிப்பாளர் சமுத்ர ஹேவாவிக்ரம மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி முகமட் அசிதீன் முகமட் அஷீப் முசைக் ஆகியோர் இன்று புதன்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தனர்.