2 மில்லியனை நன்கொடையாக வழங்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம்
நாட்டின் சுகாதார துறைக்கு உதவும் வகையில், அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதத்தின்படி இது 718 மில்லியன் ருபாவை வழங்கியுள்ளது. அதற்கமைய, புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்கான அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக தேசிய புற்றுநோய் வைத்தியசாலைக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் குழந்தைகளுக்கான சிறுவர் பராமரிப்புக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் நன்கொடையாக வழங்கப்படவுள்ளது.
நாட்டிற்கு அவசியமான இந்த தருணத்தில் இந்த நன்கொடையை வழங்குவதில் இலங்கை கிரிக்கட் நிறுவனம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், மேலும் இந்த சவாலான காலகட்டத்தை முறியடிக்க எமது தேசத்திற்கு எமது பூரண ஆதரவை வழங்குவோம் எனவும் இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.