
2 பாடசாலை மாணவர்களை காணவில்லை
மாரவில பிரதேசத்தில் 2 பாடசாலை மாணவர்கள் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் முதல் காணாமல் போயுள்ளனர்.
நாத்தாண்டி பிலாகட்டுமுல்ல நாலந்தா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வரும் நாத்தாண்டிய, முட்டிபடிவெல பகுதியை சேர்ந்த கவீச மதுசங்க (வயது – 15) மற்றும், நாத்தாண்டிய, சாகரகம பகுதியை சேர்ந்த லக்ஷான் நிமந்த (வயது – 15) என்கிற சிறுவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
குறித்த இரண்டு மாணவர்களிடமிருந்தும் புகையிலை உள்ளிட்ட சில பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டமை அடுத்து பாடசாலை அதிபர் அவர்களை கடுமையாக எச்சரித்துள்ளதாகவும் இதனால் மாணவன் மனமுடைந்ததாக அவரது தாயார் பொலிஸாரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
மாரவில பொலிஸார் காணாமல் போன சிறுவர்களை தேடும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
