
2 பணயக்கைதிகள் விடுவிப்பு
ஹமாஸ் பயங்கரவாதிகளினால் பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் மேலும் 2 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரண்டு வயோதிப பெண்களே விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக, குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலில், ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்திய நிலையில், அங்கிருந்து 200க்கும் மேற்பட்டவர்கள் கடத்திச் செல்லப்பட்டு பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை விடுவிப்பதற்கு பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.
முன்னதாக இரண்டு அமெரிக்க பிரஜைகள் ஹமாஸ் பயங்கரவாதிகளினால் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
