
2 ஆவது கணவனுக்கு தன்னுடைய மகள் மூலம் குழந்தை பெற்றெடுக்க செய்த தாய்
இந்தியாவின் ஆந்திரா மாநிலம் ஏலூர் மாவட்டம் வட்லூர் பகுதியில் பெண் தனது இரண்டாவது கணவருக்கு வாரிசு பெற்று தருவதற்காக தான் பெற்ற பிள்ளைகளை அவனிடம் ஒப்படைத்துள்ளார்.
30 வயதுடைய குறித்த பெண்ணின் கணவன் உடல்நலக் குறைவால் 2007 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், தனது இரண்டு மகள்களுடன் தாய் மாமன் சதீஷ் குமாரை இவர் இரண்டவாது திருமணம் செய்து கொண்டார்.
முதல் கணவருக்கு பிறந்த இரண்டு மகள்களுடன் 2 ஆவது கணவன் சதீஷ்குமாருடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தார் இந்த பெண். இந்த நிலையில், சதீஷ் குமார் தனக்கென வாரிசு வேண்டும் என்று அடிக்கடி தகராறு செய்ய தொடங்கியுள்ளார், அதற்கு அந்த பெண் குடும்பக் கட்டுப்பாடு செய்து செய்துள்ளதாகவும், இனி அதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால் கோபமுற்ற 2 வது கணவன் குழந்தை இல்லையென்றால் நான் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார். கிடைத்த இந்த வாழ்க்கையும் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் ‘ வேறு பெண்ணை நீ திருமணம் செய்ய வேண்டாம் என் மூத்த மகளிடம் குழந்தை பெற்றுக்கொள்” என்று கூறி விசாகப்பட்டினத்தில் 8 ஆம் தரத்தில் படித்து வந்த சிறுமியை சதீஷிடம் ஒப்படைத்துள்ளார்.
சிறுமி எவ்வளவோ மன்றாடியும் காதுகொடுக்காத தாயின் இரண்டாவது கணவன் சிறுமியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதனால் கர்ப்படைந்த சிறுமியின் கர்பதை வெளியில் தெரிந்தால் பிரச்சனை என்று கலைத்துள்ளனர், மீண்டும் சிறுமியை பலாத்காரம் செய்ததால் இரண்டாவது முறை கர்ப்பமான சிறுமிக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.
எனக்கு பெண் குழந்தை வேண்டாம் ஆண் குழந்தை தான் வேண்டும் என்று கூறி இரண்டாவது மகளுக்கு குறிவைத்த கொடூரனின் எண்ணத்தை அறியாமல், அதே போல் இரண்டாவது மகளையும் ஒப்படைத்தார் அந்த தாய்.
இரண்டாவது மகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கர்ப்பம் தரித்துள்ளார். இவருக்கு பிறக்கும் போதே ஆண் குழந்தை இறந்து பிறந்ததென்று குழந்தையை கால்வாயில் வீசியுள்ளனர், அந்த பெண்ணிற்கும் சதீஷுக்கும் வாக்குவாதம் மீண்டும் வந்ததால் ஆத்திரமடைந்த பெண் விசாகப்பட்டினம் பொலிஸாரிடம் புகாரளித்தார்.சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சதீஷ் குமாரை கைது செய்த பொலிஸார், பெற்ற மகள்களின் வாழ்க்கையை சீரழித்த தாயையும் கைது செய்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
