2 ஆண்டுகளாக கப்பலில் வாழும் இளம்பெண்

இங்கிலாந்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 2 ஆண்டுகளாக கப்பலில் பயணம் செய்து, உலகை சுற்றி வருகிறார்.

இங்கிலாந்தின் எசெக்ஸ் பகுதியைச் சேர்ந்த எலன் ஹார்டி ( வயது 23 ) கடந்த 2 ஆண்டுகளாக பயணிகள் கப்பலில் பயணம் செய்து, உலகை சுற்றி வருகிறார். 2021 முதல் கப்பலில் தங்கியுள்ள இவர், உலகம் முழுவதும் பயணம் செய்கிறார். இதுவரை, ஆஸ்திரேலியா, பிஜி உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சென்றுள்ளார். கப்பலில் பயணிக்கும் இவர், அங்கேயே தனக்கான பணத்தையும் சம்பாதிக்கிறார் என்பது ஆச்சரியமான விடயம்.

கப்பலில் நடனக் கலைஞராக இணைந்த எலன் ஹார்டி, தற்போது ஒவ்வொரு நாளும் கப்பலில் இருக்கும் 3,000 பயணிகளை மகிழ்விக்கிறார். இதன் மூலம் பெரும் வருமானத்தை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கப்பலிலேயே 28 வயதான லூயிஸ் என்ற காதலனையும் கண்டுபிடித்து விட்டார். முதலில் சிங்கப்பூரில் லூயிஸை சந்தித்தார். அவர் கப்பல் மாலுமி குழுவின் உறுப்பினர். லூயிஸ் தற்காலிகமாக வேறொரு கப்பலில் நியமிக்கப்பட்டாலும், இறுதியில் எலன் ஹார்டி பணிபுரியும் கப்பலுக்கே மாற்றப்பட்டார். தற்போது இருவரும் சேர்ந்து உலகை சுற்றி வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்