2ஆவது நாளாக பணிபகிஷ்கரிப்பு

-மூதூர் நிருபர்-

மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள , 42 கிராம சேவையாளர்கள் பிரிவுகளைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர்கள் இன்று செவ்வாய்கிழமை 2வது நாளாகவும் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கிராம சேவையாளர் அலுவலங்கள் மூடப்பட்டு நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன.

நாடளாவிய ரீதியில் உள்ள கிராம உத்தியோகத்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்