1990 நோயாளர் காவு வண்டி சேவைக்கான புதிய அலுவலகம்!

1990 நோயாளர் காவு வண்டி சேவைக்கான புதிய அலுவலகம், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இன்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

கொழும்பு 07, ஹோர்டன் பிளேஸில் (Horton Place) அமைந்துள்ள இடத்தில் இந்த புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.